மாலை வேளையில் கடற்கரையில் நடக்கறதுரொம்ப சுகமா இருக்குல என்றேன் நான்ஆமா நீ என்னை அணைச்சுக்கிட்டு நடந்தாஇன்னும் சுகம் என்றாய் நீ
குளித்துவிட்டு வந்த உன் கூந்தலிலிருந்துசொட்டிய நீர் உன்னை பனியில்குளித்த ரோஜாவா காட்டுது என்றேன்,பக்கத்துல வராத முள்ளு குத்திரும் என்றாய் கிண்டலாய்,முள் தைத்தால் என்ன,ரோஜாவைஅணைத்துக் கொள்ளலாமே என்றேன் நான்.
சமைக்க கற்றுக்கொள்கிறேன் என்று உன்னிடம்அடம் பிடித்து சமயலறைக்கு வந்தேன்,நீ சமைக்கும் அழகில் மயங்கி நின்றேன்சமைக்க கத்துகுறேன்னு சொன்ன என்றாய்அழகை ரசிக்க கற்றுகொண்டிருக்கிறேன் என்றேன் நான்.
பனியில் குளித்த ரோஜாவை என்னிடம் காட்டி
எவ்வளவு அழகு இல்லை என்றாய்,ஆம் ஒரு ரோஜா இன்னொரு ரோஜாவைவைத்திருப்பது அழகுதான் என்றேன் நான்.
எனக்கு இடி சத்தம் கேட்டால் பயம்,பக்கத்துல இருக்குறவங்கள கட்டி பிடிச்சுப்பேன்நீ என்ன பண்ணுவ என்றாய்?உன் அருகில் வந்து நின்றுகொள்வேன் என்றேன் நான்.
எனக்கு மொட்டை மாடியில் படுத்துக்கிட்டு நிலாவைபார்க்க பிடிக்கும், உனக்கு என்றாய்உன் மடியில் படுத்துக்கிட்டு உன் முகத்தைபார்க்க பிடிக்கும் என்றேன் நான்
எப்பவுமே என்னை கொஞ்சிகிட்டே இருக்கியேசலிப்பு தட்டிறாதா உனக்கு என்னை என்றாய்சுவாசிக்க சலிப்பு தட்டுமா என்ன?
உன்னை எவ்வளவு பிடிக்கும்னு காட்றதுக்கு கைய விரித்தால்ஏண்டா என்னை கட்டிபிடிச்ச என்றாய்?அது நீ உன்னை அணைக்க விடுத்த அழைப்பு
என்றல்லவா நினைத்தேன் என்றேன் நான்.
ஏண்டா என்னை சும்மா சும்மா வெட்கப்பட வைக்குற என்றாய்அப்பதானே நீ உன் வெட்கத்தை மறைக்க என்னை கட்டிபிடிக்குற என்றேன் நான்
என்னை கட்டி பிடிக்க உனக்கு பிடிக்குமாஇல்லை கொஞ்சுவதற்கு பிடிக்குமா என்றாய்கட்டி பிடிச்சுகிட்டே கொஞ்ச பிடிக்கும் என்றேன் நான்.
உனக்கு ஏன்டா எப்பவும் ரோஜாப்பூ மட்டும் பிடிக்குது என்றாய்அத பார்க்குறப்ப எல்லாம் உன் வெட்கம் ஞாபகம் வருதே அதான் என்றேன் நான்.
தேவதை உன் பிறந்தநாள் நான்அசந்து போற மாதிரி ஒரு பரிசு கொடு மாம்ஸ் என்றாய்இதழ் முத்தம் தந்தேன் நான்அசந்து போற மாதிரி கேட்டாகிறங்கி போற மாதிரி குடுத்துட்டியே மாம்ஸ் என்றாய்
நான் உன்னிடம் எதையும் மறைத்ததில்லைஆனால் நீ அப்படி இல்லை என்றேன்அதிர்ந்துபோன நீ எதை மறைத்தேன் உன்னிடம் என்றாய்பார் உன் சேலை இடைவெளியில்தெரியும் இடுப்பை கூட மூடுகிறாய் என்றேன் நான்
மழையில் நனைந்து வந்த எனக்கு தலை துவட்டிவிட்டாய் ,அருகில் பார்த்த உன்னை இழுத்து அணைத்தேன்,என்னடா குளிருதா என்றாய்,இல்லைகுளிர் விட்டு போச்சு என்றேன் நான்.
தொட்டா சிணுங்கி செடிய தொட்டா ஏன் சுருங்குது என்றாய்,வெட்கத்துனாலதான் என்றேன் நான்,அது எப்படி என்றாய்?
இப்படிதான் என்று உன்னை தொட்டேன் நான்.
எனக்கு ரொம்ப பிடிச்ச ஸ்வீட் லட்டு,
உனக்கு என்றாய் உன் இதழ்கள் என்றேன் நான்.