Sunday, June 27, 2010

அப்பதானே என்னை கட்டிபிடிக்குற


ஏண்டா எப்பவுமே என்னை திகில்
படத்துக்கே கூட்டிட்டு போற என்றாய்,
அப்பதானே
பயம் தெரியாம இருக்க
என்னை கட்டிபிடிக்குற என்றேன் நான்.

Wednesday, June 16, 2010

நிலாவைத்தான் பார்க்கிறேன் நான்


அதிகாலையில் துயில் கலைந்து எழுந்தேன்
கலைந்த ஓவியமாய் அருகில் நீ,
உன்னை ரசித்து கொண்டிருந்த என்னிடம்
காலையில் சூரியனை தாண்டா
பார்க்கணும் என்றாய் நீ,
நிலாவைத்தான் பார்க்கிறேன் என்றேன் நான்.

காதலாகி.....


காதலில் சொல்லுவதை விட செய்வதுதான்
சிறந்தது என்றேன் நான்,
எப்படி என்றாய் நீ?
உன்னை கட்டிபிடிக்கனும்னு சொல்லுவதை
விட உன்னை கட்டிபிடிக்கறதுதானே
நல்லா இருக்கும் என்றேன் நான்

Wednesday, June 9, 2010

என் செல்ல குழந்தை


என்னை குழந்தைன்னு சொல்லாத
நான் பெரியவ என்கிறாய்,ஆனால்
உன்னை அணைக்காமல் நம் குழந்தையை
கொஞ்சினாலோ
என்னை யார் கொஞ்சுவா என்கிறாய்?
பின் உன்னை குழந்தை என்று சொல்லமால்
என்னவென்று
சொல்வது என் செல்ல குழந்தையே

Monday, June 7, 2010

கொஞ்சிட்டே இருக்கலாம்


ஊருக்கு ரெண்டு நாள் போயிட்டு வரேன்னு சொன்னா
ஒரு வாரம் கழிச்சு வர சொல்லுற,
நான் இல்லைனா உனக்கு சந்தோஷமா என்றாய்?
நீ பக்கத்துல இல்லைனா உன்னை
எப்படி எல்லாம் கொஞ்சலாம்னு யோசிப்பேன்,
நீ வந்ததும் கொஞ்சலாம்ல
அதுக்குதான் என்றேன் நான்.

Friday, June 4, 2010

மழை பெய்து முடித்த மாலை நேரம்


முத்தம் தான் எனக்கு பிடிக்கும்


பிறந்தநாளுக்கு ரொம்ப பிடிச்சத தாடானு கேட்டா
முத்தமா கொடுக்குற பொறுக்கி என்றாய்
முத்தம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்றேன் நான்

என்மேல் உன்வாசம்



என் துண்டுலையே ஏண்டா நீயும் துடைக்குற என்றாய்,
அதுல உன்வாசம் இருக்கே அதான் என்றேன் நான்.

நீ என்னை கட்டிக்கறது தான் பிடிக்கும்


நான் சேலை கட்டுவது பிடிக்குமா
இல்லை தாவணி கட்டுவது பிடிக்குமா என்றாய்?
நீ என்னை கட்டிக்கறது தான்
பிடிக்கும் என்றேன் நான்.

நீ என்னை கட்டிகறது தான் பிடிக்கும்

நான் சேலை கட்டறது பிடிக்குமா
இல்லை தாவணி கட்டறது

உன் அணைப்பில் நான் இருப்பேன்.


இந்த உலகத்துலேயே உனக்கு ரொம்ப பிடிச்ச
இடம் எது என்றேன் நான்
உன் கை அணைப்பில் நான் இருக்கும்
இடம் தான் என்றாய் நீ.

இறுக்க அணைச்சு.............


நீ தானே என்னை கட்டி பிடிக்க சொன்ன
ஏண்டா இப்ப தள்ளி விடுற என்றாய்
அப்ப தானே நீ இன்னும் இறுக்கமா
கட்டி பிடிப்ப என்றேன் நான்.