என் உடைகளிலேயே உனக்கு எந்த
உடை ரொம்ப பிடிக்கும் என்றாய் நீ,
உன் பிறந்தநாள் உடை என்றேன் நான்,
எந்த பிறந்தநாள் உடை
என்றாய் அப்பாவியாய் நீ?
தலை சாய்க்க தலையணை கேட்டால் மடி தருகிறாய்,
சாய்வதற்கு இருக்கை கேட்டால் தோள் தருகிறாய்,
உண்பதற்கு கேட்டால் மட்டும் உணவையே தருகிறாய்,
இதழ்களை தராமல் ஏனடி வஞ்சிக்கிறாய்?