Tuesday, June 25, 2019

 எவ்வளவு நாட்கள் ஆனாலும் மறக்காது 
உன்னை முதன்முதலில் இரவு ஆடையில் 
பார்த்த நாளையும் ,
ஐயோ இந்த ஆடையில் நம்மை 
பார்த்து விட்டானே என்ற 
உன் வெட்கத்தையும் 

Saturday, October 8, 2011

அப்பதானே உன்னை கட்டிபிடிக்கலாம்


ஏண்டா என்னை சும்மா சும்மா
கோபப்பட வைக்குற என்றாய் நீ,
அப்பதானே உன் கோபத்தை குறைக்குற
சாக்குல உன்னை அடிக்கடி கட்டி
பிடிக்கலாம் என்றேன் நான்.

Friday, September 16, 2011

என் செல்ல திருடா

என்ன மாம்ஸ் நம்ம அறையில
ஒரே ஒரு நாற்காலி மட்டும்
தான் இருக்கு என்றாய் நீ,
அப்ப தானே நீ எப்பவும்
என் மடியிலேயே உட்காருவ
என்றேன் நான்

Wednesday, September 7, 2011

அசத்துறியே என் செல்லமே


முத்தம் கொடுக்க தெரியாதுனு
சொன்ன,ஆனா இவ்வளவு
அழகா கொடுக்குற என்றேன் நான்
தெரியாதுனு சொன்னதுனால தானே
நீ கத்து தந்த அதுக்குதான் என்றாய் நீ



Monday, August 15, 2011

காதல் கூடி போச்சு


தேன் எங்க இருக்குனு கேட்டா
என்
உதட்டையா காமிக்குற உனக்கு
கொழுப்பு கூடி போச்சுடா என்றாய் நீ,
இல்லை காதல் கூடி போச்சு
என்றேன் நான்

Friday, July 15, 2011

அட செல்ல திருடா


நான்தான் சேலை நிறைய தடவை
கட்டி இருக்கேனே நீ பார்த்தது
இல்லைன்னு சொல்லுற என்றாய் நீ,
உன்னை சேலைல பார்த்து இருக்கேன்
ஆனா நீ சேலை கட்டுவதை தான்
பார்த்தது இல்லை என்றேன் நான்

Monday, July 11, 2011

பூவுக்கே பூ வைப்பதால்.........


எனக்கு எதுக்குடா இவ்வளவு பூ என்றாய் நீ.
உனக்கு கொடுப்பதற்காக பறிக்கிறேன் என்று
தெரிந்ததும் எல்லா பூக்களும்
என்னை பறித்துக்கொள் பறித்துக்கொள்
என்று சொல்லுகிறதே நான் என்ன
செய்வது என்றேன் நான்