Tuesday, September 14, 2010

இவ்ளோ நேரமாடா கைய பிடிக்க


ஒரு மழைகாலத்து மாலை நேரம்,
மெல்லிய சாரலில் நனைந்தபடி சென்றுகொண்டிருந்தோம்,
நனைந்த ஓவியமாய் அருகில் நீ,
தடுமாறிய உன் கையை பிடித்தேன்,
தத்தி
இவ்ளோ நேரமாடா
கைய
பிடிக்க என்றாய் நீ

நீ சரியான முட்டாள்டா


எனக்கு சேலை கட்ட தெரியாது
நீ தான் கட்டிவிடணும்னு சொன்ன,
ஆனா நீயே கட்டிகிட்ட என்றேன் நான்,
தெரியாதுன்னு சொன்னா நீ கட்டி விடுவாய்
என்று நினைத்தேன்,தெரியாதுனு சொல்லிட்ட,
நீ சரியான முட்டாள்டா என்றாய் நீ.